'கர்ப்பிணி' மகளை காரில் கடத்திச்சென்ற பெற்றோர்... காரணத்தை கேட்டு 'அதிர்ந்து' போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன்(24). இவரும் மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த கீதா சோப்ரா(19) என்பவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து லால்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது கீதா கணவன் வீட்டாருடன் செல்வதாக கூறி விட்டார்.

இந்த நிலையில் 3 மாத கர்ப்பிணியான கீதா சோப்ரா நேற்று தனியாக வீட்டில் இருந்தபோது, வீடு புகுந்த கும்பல் ஒன்று அவரை காரில் கடத்தி சென்றது. ஹரிஹரன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்ய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போலீசார் கீதாவை அவரது பெற்றோர் காரில் கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து துவரங்குறிச்சி சோதனைச்சாவடியில் அந்த கார் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டது.
விசாரணையில், கீதா சோப்ராவை கடத்தியது, அவரது தந்தை மாரிராஜன்(57), தாய் விஜயகுமாரி(43) மற்றும் அவரது உறவினர்கள் மதுரையை சேர்ந்த கார்த்திக்(21), குமரேசன்(22), கார் டிரைவர் தினேஷ்(23) மற்றும் லால்குடியை சேர்ந்த உடையன்னசாமி(48) என்பதும், கீதா சோப்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால், அவரை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.

மற்ற செய்திகள்
