‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கரும்பாலை பகுதியை சேந்தவர் முருகன். இவர் கடந்த 5ம் தேதி பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் முருகனுக்கு துணையாக இருந்த அவரது மனைவி இன்று காலை 5 மணியளவில் தேநீர் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம கும்பல் முருகன் சிகிச்சை பெற்று வந்த அறைக்குள் சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனுக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட முருகனுக்கு பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக முருகன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்மாவட்டத்தின் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
