ஆட்டுக்குட்டியை 'கடித்த' வளர்ப்பு நாயால்... அண்ணன் 'மகனுக்கு' நேர்ந்த கொடூரம்... 3 பேர் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆட்டுக்குட்டியை நாய் கடித்ததை அடுத்து ஏற்பட்ட மோதலில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள சொக்கானை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மூக்கூரான். இவருக்கும் இவருடைய சகோதரர்கள் சண்முகவேல், குமரையா இருவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் மூக்கூரான் மகன் முனியசாமி என்பவர் வளர்த்து வந்த நாய் சண்முகவேலின் ஆட்டுக்குட்டியை கடித்து விட்டது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சண்முகவேல் தரப்பு மூக்கூரானின் மற்றொரு மகனான வில்வத்துரை(31) என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டனர்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். இதையடுத்து சண்முகவேல் உட்பட மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
