‘உன் வயசுல எனக்கு ரெண்டு பொண்ணு இருக்கு’.. கல்லூரி மாணவியுடன் ‘குடித்தனம்’ நடத்திய கணவன்.. ‘அதிரடி’ ஆக்‌ஷனில் இறங்கிய மனைவி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 11, 2020 01:24 PM

கன்னியாகுமரி அருகே கணவன் கல்லூரி மாணவியுடன் குடித்தனம் நடத்தியதால் அப்பெண்ணின் வீட்டின்முன் மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari man affair with college girl, Wife complaint

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற ரஞ்சித். இவர் பளுகல் பகுதியை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மினிபேருந்து ஓட்டுநரான மணிகண்டன், பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவிகளை பேச்சால் மயக்கி காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மடிச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனால் தனது முதல் மனைவி மற்றும் மகள்களை தவிக்க விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டனின் மனைவி பளுகல் களியக்காவிளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து கணவன் குடித்தனம் நடத்தி வரும் கல்லூரி மாணவி வீட்டுக்கு வந்த சுகந்தி, தனது கணவனை தன்னிடம் ஒப்படைக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ‘உன் வயதில் எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவரை விட்டு விடு’ என சுகந்தி கேட்க, பதிலுக்கு கல்லூரி மாணவியும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

இருவரும் மாறி மாறி கூச்சலிட்டதால் வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kanyakumari man affair with college girl, Wife complaint | Tamil Nadu News.