'போலீஸ்' காதுல 'விழுற' அளவுக்கு... அப்டி ஒரு 'ரகசியத் திட்டம்...' 'கொள்ளையடிக்க' திட்டம் போடும் போதே... 'தட்டித் தூக்கிய போலீசார்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்புவனகிரி வெள்ளாற்று பாலத்தில் நின்று கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாற்று பாலத்தில் சந்தேகபடும்படி 3 பேர் பேசி கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். சந்தேகத்தின பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அவர்கள் மூவரும் நல்லான்பட்டினம் பகுதியை சேர்ந்த மணிமாறன், காசிராஜன், கீரப்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
