‘டிஸ்ப்ளே ரிப்பேர் ஆன செல்போனை வித்து ஏமாத்திருக்க’.. கடுப்பான ‘நண்பர்கள்’.. வாலிபருக்கு நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிஸ்ப்ளே ரிப்பேர் ஆன செல்போனை விற்றதற்காக வாலிபர் ஒருவரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவர் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு வீரமணியை அவரது நண்பர்கள் மது குடிக்க அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வீரமணி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே வீரமணி வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீரமணியின் பெற்றோர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீரமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார்,‘வீரமணி என்பவர் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். வேலை பார்த்துக்கொண்டே உள்ளூர், வெளியூர்களில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது நண்பர்களிடம் ஒரு செல்போனை வீரமணி விற்றிருக்கிறார். அடுத்த சில நாள்களில் செல்போன் டிஸ்ப்ளே பழுதாகியுள்ளது.
இதனை அடுத்து ‘டிஸ்ப்ளே போன செல்போன் வித்திருக்கியே’ என வீரமணியிடம் போனில் அவரது நண்பர் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் போனிலேயே சண்டை வெடித்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு அவரது நண்பர்கள் ‘நமக்குள் பிரச்சனை வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம்’ என வீரமணியை மது குடிக்க அழைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தகராறு ஏற்பட்டு வீரமணியை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News Credits: Vikatan

மற்ற செய்திகள்
