‘இன்ஸ்டாகிராம்ல மத்தவங்க யாரும் இத பாக்கமுடியாது’.. சோதனை முயற்சியில் இறங்கிய நிர்வாகம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Selvakumar | Jul 18, 2019 06:12 PM
பயனர்களின் மன அழுத்ததை குறைக்க இன்ஸ்டாகிராம் செயலில் அதன் நிர்வாகம் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இன்ஸ்டாகிராம் என்னும் செயலியை உபயோகித்து வருகின்றனர். பேஸ்புக் செயலியைப் போலவே போட்டோ, வீடியோ போன்றவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வசதியுள்ளது. மேலும் பேஸ்புக் போல லைக்ஸ், கமெண்ட் போன்ற ஆப்சன்களும் இதில் உள்ளன. இதனால் போட்டோ, வீடியோவை பதிவிட்டு அதற்கு எத்தனை லைக்ஸ், கமெண்ட் வந்தது என்பதை அறிய போட்டிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிலர் மன சோர்வுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகம் ஒரு முடிவெடுத்துள்ளது. அதில் இனிமேல் ஒரு பயனரின் லைக்ஸ், கமெண்ட்களை மற்றொரு பயனர் பார்க்க முடியாத வகையில் அப்பேட் கொண்டுவந்துள்ளது. இது முதலில் கனடாவில் தொடங்கப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரேசில், இத்தாலி, நியூஸிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை முயற்சியின் மூலம் பயனர்களிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் பிற நாடுகளுக்கும் இதனை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.