தொடர் தோல்விகளால்; பெங்களுரு அணியில் மாற்றமா? என்ன சொல்கிறார் வீராட் கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | Apr 03, 2019 10:09 PM

 

any changes in bangalore team for the upcoming matches in ipl

ஐ.பி.எல் சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து சந்திக்கும் 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில், ஆர்சிபி அணி தொடர்ந்து இதுபோல் தோல்விகளைச் சந்தித்தே இல்லை.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய கோலி: நாங்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான நிலைக்கு வந்துவிட்டோம், அடுத்துவரும் போட்டிகளில் மீண்டெழுந்து வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது மேலும், நாங்கள் முன்னேற்றம் காணவேண்டியது அவசியம், நம்பிக்கை அளவிலும் வளர்ச்சி காண வேண்டும்.

மேலும், இந்த ஐபிஎல் சீசன் நீண்டநாட்கள் நடத்தப்படவில்லை, ஆதலால், அடுத்து வரும் போட்டிகளையும், ஏற்கனவே நாங்கள் கடந்து வந்த போட்டிகளையும் கணக்கிட்டு அணியின் நிர்வாகிகளுடனும், பயிற்சியாளர்களுடனும் அமர்ந்து பேசி, விளையாடும் 11 பேர் கொண்ட சிறந்த அணியை அடுத்துவரும் போட்டிகளுக்குத்  தேர்வு செய்வேன். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்து விதங்களிலும் சரிசமமான கலவை கொண்ட வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறோம், அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம் என்று கேப்டன் விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.