"பெரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம்..." "இல்லை ரஜினியைத் தான் கண்டிக்கிறோம்..." போலீசைப் பார்த்ததும் உளறிய போராளிகள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 23, 2020 12:20 PM

தேனியில் ரஜினிக்கு எதிராக போராட வந்த  7 பேர், போலீசாரை கண்ட பதற்றத்தில் பெரியாரை வன்மையாகக் கண்டிக்கிறோம் என கோஷமிட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

\'We strongly condemn Periyar\'-A tense comedy event

நடிகர் ரஜினிகாந்த், பெரியாரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி, தேனி பகுதியில் அரசியல் அமைப்பினர் சிலர்  ரஜினிக்கு எதிராக போராடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்காத நிலையிலும், அவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.

அதன்படி ரஜினியை கண்டித்து கோஷமிட்டபடியே 7 பேர் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை கண்ட பதற்றத்தில் வேகமாக கோஷமிட்ட  ஒருவர், தந்தை பெரியாரை இழிவுபடுத்திய பெரியாரை வன்மையாக கண்டிப்பதாக உரத்த குரலில் கோஷமிட, அதனை அப்படியே பின்பாட்டாக பாடினர் உடன் வந்த 6 போராளிகளும்.

ஒரு முறை என்றால் பரவாயில்லை 2 வது முறையும் பெரியாரை கண்டிப்பதாக கோஷமிட்ட போராளிகள் பின்னர் சுதாரித்துக் கொண்டு ரஜினியை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதற்குள் போலீசார் அவர்களை அள்ளிச் சென்று மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

Tags : #PERIYAR #RAJINI #POLITICIAN #PROTEST #COMEDY EVENT