“மன்னிப்பு கேக்க மாட்டேன்!”.. “ராமர்-சீதை நிர்வாண உருவச்சிலை விவகாரத்தில்”.. ரஜினி அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 21, 2020 11:16 AM

1971 இல் திராவிட கழகம் நடத்திய பேரணி குறித்து, துக்ளக் விழாவில் பேசியதற்கு, ‘நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

wont apologize, rajini over his speech about periyar rally

அண்மையில் ஜனவரி 14 -ஆம் தேதி துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் நடந்த பெரியார் பேரணி குறித்து அவதூறாக பேசியதாக, ரஜினிகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. ரஜினி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட விடுதலை இயக்கங்கள் உட்பட பல அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தின.

இந்நிலையில் 1971-இல் சேலத்தில் நடந்த அந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, பத்திரிக்கைகளில் வந்த செய்தியையே தான் பேசியதாகவும், ராமர் மற்றும் சீதையின் உருவச்சிலைகள் ஆடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பேசியவர்,‘ஆகவே அந்த பேரணி குறித்து, நான் எதுவும் கற்பனையாகக் கூறவில்லை. அதனால் அந்தப் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, ‘இது மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்’ என்றும் அவர் பேசியுள்ளார்.

Tags : #RAJINIKANTH #PERIYAR #THUGLAK50