'ரஜினியின் பெரியார் கருத்து'... 'ஆதரிப்பவர்கள் யார்?'... 'எதிர்ப்பவர்கள் யார்?'....
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.

துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்த கருத்து ஒன்றை பதிவு செய்தார். அவர் முன்வைத்த கருத்துக்கு, தமிழக அரசியலில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.
இந்நிலையில், தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் திராவிட கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும், இந்த விவகாரத்தில் ஒருமித்த நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். பெரியார் குறித்து ரஜினி முன்வைத்த கருத்து தவறானது என்று கூறி, ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, பாஜக எம்.பி., சுப்பிரமணியன்சுவாமி ஆகியோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
