"என் சாமி... என் அக்கா... என் பக்கத்துலயே இருக்கும்!".. நொறுங்கிப்போன குடும்பம்!.. சரமாரி கேள்விக்கு பதில் என்ன?.. நெஞ்சை ரணமாக்கும் ஜெயஸ்ரீ தங்கையின் கதறல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 13, 2020 08:42 PM

விழுப்புறம் சிறுமி ஜெயஸ்ரீ தங்கை, தன்னுடைய அக்காவின் மரணத்திற்கு நீதி கேட்டு கதறும் காட்சி அனைவரையும் கலங்கடித்துள்ளது.

villupuram girl jayashree\'s sister shares her grief and memories

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அடுத்த சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ராஜி. இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஜெயஸ்ரீ (15) உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியப்பெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயஸ்ரீயின் தங்கை பேசுகையில், "8 வருஷத்துக்கு முன்னாடியே இவங்க மீது நடவடிக்கை எடுத்திருந்தா இன்னைக்கு என் அக்கா செத்திருக்குமா? கோடி ரூபாய் கொடுத்தாகூட என் அக்காவுக்கு ஈடாகுமா? என் சாமி என் கூடவே இருக்கும்; என் ஜெயஸ்ரீ அக்கா என் கூடவே இருக்கும்" என்று அவர் கதறித்துடித்த காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து பேசிய சிறுமியின் உறவினர், மரணத் தருவாயில் ஜெயஸ்ரீ சந்தித்த வேதனைகளை கணத்த இதயத்துடன் கண்ணீர் மல்க பதிவு செய்தார்.

அந்த வீடியோ இணைப்பு கீழே,