நோய் 'எதிர்ப்பு' சக்தி ரொம்பவே அதிகம்... போட்டிபோட்டு 'வாங்கி' செல்லும் வெளிநாட்டினர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 13, 2020 08:38 PM

மலைகளின் அரசி என புகழப்படும் கொடைக்கானலில் அவக்கோடா பழங்கள் அதிகளவில் காய்த்து குலுங்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இந்த பழங்களில் அதிகம் இருப்பதால் வெளிநாட்டினர் இப்பழங்களை அதிகளவில் வாங்கி உண்கின்றனராம்.

Lockdown: Avocado Farmers Request to Tamil Nadu Government

இந்த பழங்களில் பல்வேறு வைட்டமின் சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கால்சியமும் அதிக அளவில் உள்ளது. மேலும் எந்த பழத்திலும் இல்லாத அளவுக்கு இதில் நல்ல கொழுப்பு சத்து உள்ளது. இந்த பழங்களை வெளிநாட்டினர் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அவர்கள் தினசரி ஒரு வேளை உணவாகவே இந்த பழங்களை சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா வேகமாக பரவிவருவதால் வெளிநாடுகளில் வசிப்போர் இந்த பழங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கொடைக்கானல் பகுதியில் தற்போது சீசன் தொடங்கி இருந்தாலும் ஊரடங்கு காரணமாக அவற்றை ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகள் இந்த பழங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இந்த பழங்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.