"என்ன ஒரே துர்நாற்றமா இருக்கு.." வீட்டுச்சுவர் ஓரத்துல அதிர்ச்சி.. தோண்டி பார்த்ததும் நடுங்கி போன கிராம மக்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்உளுந்தூர்பேட்டை பகுதியில், புதிதாக வேலை நடந்து வந்த வீட்டின் அருகே துர்நாற்றம் வீசிய நிலையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த மாம்பாக்கம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50).
விவசாயியான இவர், அதே ஊரில் தனக்கு சொந்தமான நிலத்தில், புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வந்துள்ளார்.
மாயமான வடமாநில இளைஞர்கள்
ரமேஷின் வீட்டில் டைல்ஸ் வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். ரமேஷ் கட்டி வரும் வீட்டின் மாடிப் பகுதியில் தங்கி இருந்தே பணிகளை அவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த மூன்று பேரில் ஒருவர் மட்டும், கடந்த சுமார் 4 தினங்களுக்கு முன், ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீதமிருந்த இருவரும் ஊருக்கு கிளம்பி செல்வதற்காக தயாராக இருந்த நிலையில், திடீரென இருவரும் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
உறைந்து போன ரத்தம்
இதனைத் தொடர்ந்து, அந்த வடமாநில இளைஞர்களை அங்குள்ளவர்கள் தேடி பார்த்ததாகவும் தெரிகிறது. ஆனால், எங்கும் அவர்களை காணவில்லை. இதனிடையே, ரமேஷ் புதிதாக கட்டி வந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே, மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து நின்றதாக அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், ரமேஷ் வீட்டு காம்பவுண்ட் அருகே இருந்து, கடுமையான துர்நாற்றமும் அந்த கிராமப் பகுதியில் வீசி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார், ரத்தம் உறைந்து போயிருந்த இடத்தை, தாசில்தார் முன்னிலையில் தோண்டி பார்த்தனர்.
தோண்டிய இடத்தில்..
அப்போது, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறியது. தோண்டிய இடத்தில் ரத்தக் காயங்களுடன் உடல் ஒன்று இருந்துள்ளது. மேலும், மாயமான 2 பீகார் இளைஞர்களில் ஒருவரான பவுன் குமார் உடல் தான் அது என்பது உறுதியானது. இதனையடுத்து அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடமாநில இளைஞரை கொலை செய்தது யார் என்பது பற்றியும், அவருடன் வந்து மாயமான மற்றொரு வடமாநில இளைஞர் எங்கே இருக்கிறார் என்பது பற்றியும், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மண்ணில் இருந்து, ரத்தம் வெளியேறி உறைந்து நின்ற சம்பவம், அக்கிராமத்தில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8