"ஊர்'னா இப்படி இருக்கணும்".. 40 வருசமா ஒரு போலீஸ் கேஸ் கூட இல்லையாம்.. இதுக்காக அவங்க FOLLOW பண்ற விஷயம் தான் அல்டிமேட்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், நாம் சமூக வலைத்தளத்தில் அதிகம் வலம் வரும் போது, ஏராளமான வைரல் விஷயங்களை நம்மால் காண முடியும்.
இதில் அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய விஷயங்கள் என வித விதமாக நிறைந்திருக்கும்.
அதே வேளையில், நம்மை சுற்றி நடக்கும் பயங்கரமான விஷயங்களை பார்க்கும் போதும் ஒருவித பதற்றம் மனதுக்குள் உருவாகும்.
உதாரணத்திற்கு, கொலை, கொள்ளை என பல அசம்பாவிதங்கள் நடக்கும் செய்தியை நாளுக்கு நாள் ஏராளமாக பார்க்க முடியும். இதன் காரணமாக, ஊரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் கூட ஏராளமான புகார்களை விசாரித்த படி பரபரப்பாக இயங்கி வரும். ஆனால், தெலங்கானாவில் அமைந்துள்ள கிராமம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டம், பிக்னூர் மண்டல் பகுதியை அடுத்து அமைந்துள்ளது ரியாகட்லபள்ளி (Ryagatlapally) என்னும் கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே 180 குடும்பங்களும், 930 மக்களும் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த கிராமத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக எந்தவித புகார்களும் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில், "வழக்கு இல்லாத கிராமம்" என்ற பெயரும் இந்த கிராமத்திற்கு சுதந்திர தின விழாவின் போது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கான சான்றிதழும் கிராம நிர்வாக குழுவின் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறு சிறு தகராறுகள் உருவானாலும் அதனை கிராம தலைவர்கள் மூலமே அங்குள்ளவர்கள் தீர்த்து வைக்கின்றனர்.
இது தவிர, குடும்ப வன்முறை மற்றும் தகராறு என எதுவுமில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கிராமத்தால் போலீசாரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விவசாயத்தை மூலதனமாக கொண்டு இயங்கி வரும் Ryagatlapally கிராம மக்கள், தவறுகள் நேரும் போது அதனை திருத்துவதற்காக சில கமிட்டிகளையும் உருவாக்கி வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், எதாவது குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் உருவானால், அவர்களின் வீட்டிற்கே சென்று பிரச்சனைகளை பேசி சமரசம் செய்தும் வைக்கின்றனர். இந்த கிராமத்தை பற்றிய செய்தியை கேள்விப்படும் பலரும் மற்ற கிராமம் மற்றும் நகர பகுதிகளிலும் இருப்பவர்கள்,இந்த கிராமத்தை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.