"அன்புள்ள அப்பா அப்பா..".. மகனை பைக்கில் அழைத்துப் போகும் போது தந்தை செய்த செயல்.! கலங்க வைத்த வீடியோ!!..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 06, 2022 05:34 PM

இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியா என்பது மிக முக்கியமான ஒரு தளமாக பார்க்கப்படுகிறது. நம்மில் பலரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுவதுடன் மட்டுமில்லாமல், உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது பற்றி நம்மால் தெரிந்து கொள்ளவும் செய்கிறோம்.

father prevents son falling from bike netizens emotional

Also Read | 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர்.. நள்ளிரவில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கொடூரம். !

ஒரு பக்கம் அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் என வித விதமான செய்திகள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விஷயங்கள் நாள் தோறும் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அதிலும் குறிப்பாக, மனதை நெகிழ வைக்கக் கூடிய வீடியோக்கள், பெரும்பாலும் மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், சில நாட்கள் நம் நினைவில் அப்படி இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஒரு பிள்ளைக்கு கிடைக்கும் தாய் தந்தையரின் பாசத்திற்கு எந்த ஒரு விஷயமும் நிச்சயம் ஈடாகாது. சிறு வயது முதலே பெற்றோர் அரவணைப்பில் குழந்தைகள் வாழும் போது அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷமும் மிகுந்த ஆழமுள்ள ஒன்றாக தான் இருக்கும். இதில், குழந்தைக்கு ஒரு சூப்பர் ஹீரோ போலவும் தந்தை பார்க்கப்படுவார்.

அப்படி தந்தை ஒரு சூப்பர் ஹீரோ என்பதை உணர்த்தும் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

father prevents son falling from bike netizens emotional

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பின்னால் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். முன்னாள் அமர்ந்து வண்டி நபர் ஒருவர் வாகனத்தை இயக்கி கொண்டிருக்க, பின்னால் இருக்கும் சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இதனால், தூங்கி ஒரு பக்கமாக சாய்ந்து இருக்கும் சிறுவனை வாகனத்தை இயக்கிக் கொண்டே அந்த சிறுவன் கீழே விழுந்து விடாமல் இருக்க, அவனை அணைத்தவாறு பத்திரமாக பிடித்துக் கொள்கிறார்.

ஒரு கையால் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டே மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சியான விஷயம், பார்ப்போர் பலரையும் மனம் உருகவும் வைத்துள்ளது.

Also Read | TV பார்க்கும் போது முன்னாள் காதலருடன் வந்த சண்டை?.. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் செய்த பதற வைக்கும் சம்பவம்!!

Tags : #FATHER #PREVENTS #SON #FALL #BIKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Father prevents son falling from bike netizens emotional | India News.