புதுசா வாங்குன பைக்-கு மாலையை போடுங்க.. டக்குன்னு கணவர் செஞ்ச காரியம்.. எல்லோரும் சிரிச்சிட்டாங்க.. CUTE வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிதாக வாங்கிய பைக்கிற்கு மாலை போடுவதற்கு பதிலாக, ஒருவர் தனது மனைவி கழுத்தில் மாலையை போட போகிறார். இதனால் அவரது மனைவி வெட்கப்பட்டுப்போகிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகில் கணவன் - மனைவி இடையேயான நெருக்கம் பல்வேறு விவாதங்களுக்கு வித்திடுகிறது. பரஸ்பர புரிதலும், காதலும் மட்டுமே நீடித்த மண வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைகிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய இணையை மகிழ்வித்து அதன்மூலம் திருப்தி காணும் தம்பதியர் மட்டுமே பல நாட்கள் கழித்தும் தங்களுடைய காதலை பெரும் விருட்சமாய் வளர்க்க முடிகிறது. வாழ்வின் சிறிய சிறிய கணங்களில் கூட தமது அன்பை வெளிப்படுத்தும் சாமானியர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாட தவறுவதில்லை. அப்படியான ஒருவரை பற்றிய வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், ஒருவர் தனது புது பைக்கை டெலிவரி எடுக்க மனைவியுடன் சென்றிருக்கிறார். அப்போது ஒருவர், புது வண்டிக்கு மாலை கோர்த்து அதனை வண்டியின் உரிமையாளரிடம் கொடுக்கிறார். இதனை அவரது மனைவி பார்த்துக்கொண்டு உள்ளார். மாலையை பணியாளர் போன்ற ஒருவர் கொடுக்க, அதை பெற்றுக்கொண்ட வாகனத்தின் உரிமையாளர் உடனடியாக சென்று அதனை தனது மனைவியின் கழுத்தில் போடப்போகிறார்.
அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சிரித்து, மாலையை வண்டிக்கு போடும்படி சொல்லவும் அப்பாவியாக முழிக்கும் அந்த நபர் அதன்பிறகு மாலையை வண்டிக்கு போடுகிறார். எதிர்பாராத நேரத்தில் கணவர் தனக்கு மலையிட வந்ததால், அவரது மனைவி வெட்கத்தில் முகத்தை மூடி சிரிக்கிறார். இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட, அது வைரலாகிவிட்டது. இதுவரையில் இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்வது மட்டும் அல்லாமல், இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு நெட்டிசன்கள்,"இருவருக்கும் 50 வயது இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும், அந்த அன்பு மாறவில்லை" என்றும், அந்த அம்மாவின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் எப்போதும் இருக்கட்டும்" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Cutest video on internet pic.twitter.com/kJ6AW9xL6V
— Chikoo (@tweeterrant) October 12, 2022

மற்ற செய்திகள்
