'வாத்தி' விக்ரமன் மற்றும் ஷிவினின் உதவி.. 'வயிறார' வாழ்த்திய குழந்தைகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Jan 25, 2023 07:12 PM

பிக்பாஸ் போட்டியில் கிராண்ட் ஃபினாலே வரை தேர்வான விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் குழந்தைகளுக்கு உணவு அளித்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vikraman and shivin give food for school going kids video

Also Read | இந்தியாவையே பதற வைத்த ஷ்ரத்தா வழக்கு.. அஃப்தாப்பின் கோபத்துக்கு காரணம் இதுதான்.. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீஸ்..!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு நிறைவு பெற்றது. முதல் முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்று போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலேவிற்கு தகுதி பெற்றிருந்தனர். அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவரும் ஃபினாலே வரை வந்திருந்த நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் கமல் ஹாசன். இதனையடுத்து, விக்ரமன் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதனையடுத்து வெளியே சென்று விக்ரமன் மற்றும் ஷிவின் இருவரும் குழந்தைகளுக்கு உணவு அளித்திருக்கும் வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் குழந்தைகள் தங்களுக்கான உணவு தட்டுக்கு அருகே அமர்ந்திருக்கின்றனர். அப்போது பெண் ஒருவர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் அன்னதானம் கொடுத்திருப்பதாகவும் ஆகவே அவர்கள் இருவருக்கும் நன்றாக வாழும்படி வாழ்த்து சொல்லவேண்டும் என்கிறார்.

Vikraman and shivin give food for school going kids video

Image Credit : vijay television

இதனையடுத்து விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் அனைத்து விதத்திலும் வெற்றியடைய அந்த குழந்தைகள் வேண்டிக்கொள்கின்றனர். இந்த வீடியோ காண்போரை நெகிழ செய்திருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோதே வெளியே சென்று அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு தன்னால் முடிந்த நன்மைகளை செய்ய இருப்பதாக விக்ரமன் தெரிவித்திருந்தார்.

Vikraman and shivin give food for school going kids video

அப்போது, அந்த பணிகளில் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக ஷிவின் தெரிவித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு இருவரும் உணவு அளித்திருக்கும் வீடியோ வெளியாகி இருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. மேலும், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

Also Read | 101 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.. 5 வகை உணவு, சீர்வரிசைகள் என நெகிழ வைத்த மருத்துவ கல்லூரி..!

Tags : #VIKRAMAN #SHIVIN #FOOD #SCHOOL KIDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vikraman and shivin give food for school going kids video | Tamil Nadu News.