அட .. பிரபல நடிகரின் மகளா இவங்க?.. இளம் தமிழ் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம்.. VIRAL PICS !!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 25, 2023 04:11 PM

சிறந்த இளம் தமிழக கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருப்பவர் பாபா அபராஜித். இரட்டை சகோதரரான பாபா இந்திரஜித் மற்றும் பாபா அபராஜித் ஆகிய இருவருமே தொடர்ந்து ஐபிஎல், TNPL உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் பங்கெடுத்து ஆடி வருகின்றனர். அதிலும் பாபா அபராஜித் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கவும் செய்திருந்தார்.

Baba Aparajith engaged with Jaya Veena Viral pics

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இப்படியா பண்றது?".. இஷான் கிஷன் செயலால் அப்செட் ஆன கோலி?.. மேட்ச் நடுவே பரபரப்பு சம்பவம்.. வீடியோ

பாபா அபராஜித் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இரண்டு பேருமே சிறப்பாக உள்ளூர் தொடர்களில் ஆடி வருவதால், நிச்சயம் இந்திய அணியிலும் இடம் பிடித்து தங்கள் திறனை நிரூபிப்பார்கள் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இளம் கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அதுவும் தமிழில் பிரபல குணச்சித்திர நடிகராக இருந்து வரும் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணாவுடன் தான் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் பாபா அபராஜித் சிறப்பாக திகழ்வது போல, ஜெயவீணா ஒரு நீச்சல் வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இவர் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், நிச்சயதார்த்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பாபா அபராஜித் மற்றும் ஜெயவீணா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் .. கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு.!

Tags : #BABA APARAJITH #JAYAVEENA #ENGAGEMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Baba Aparajith engaged with Jaya Veena Viral pics | Tamil Nadu News.