"அம்மா தான் அப்டி பண்ணாங்கன்னு FEEL பண்ணி பேசுனேன், ஆனா".. உள்ள வந்த தோழி சொன்ன உண்மை.. உடைந்து அழுத ஷிவின்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Dec 27, 2022 10:11 PM

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Shivin about her mother and saree incident emotional bigg boss

Also Read | ஐபிஎல் 2023 : CSK கேப்டன் தோனியா? ஸ்டோக்ஸ்-ஆ?.. கிறிஸ் கெயில் சொன்ன அசத்தலான பதில்!!

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது.

Shivin about her mother and saree incident emotional bigg boss

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். அதே போல, அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகளும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தர, ஷிவினின் நண்பர்களும் உள்ளே வந்திருந்தனர்.

ஷிவினின் தோழி மற்றும் அவரது வருங்கால கணவர் உள்ளே வந்தனர். அப்போது அவர்களை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ஷிவின், அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்றும் வந்ததற்கு நன்றி என்றும்  தெரிவித்தார். ஷிவினின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வரவில்லை என்ற சூழலில், தனது தாயிடம் சண்டை போட்டு தான் ஷிவினை பார்க்க வந்ததையும் அவரது தோழி உருக்கத்துடன் குறிப்பிட்டார். அதே போல, ஷிவினின் தாய் மற்றும் அக்காவிடம் பேசியதாகவும் ஆனால் அவர்கள் வரமாட்டோம் என தெரிவித்ததகவும் அவரது தோழி கண்ணீருடன் தெரிவித்தார்.

Shivin about her mother and saree incident emotional bigg boss

இதனைத் தொடர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க, தன்னை பார்க்க வந்து பெருமையாக உள்ளதா என ஷிவின் கேட்கிறார். அப்போது அவர்கள் இருவரும் தங்களின் நட்பு வட்டாரத்தில் ஷிவின் பேவரைட் போட்டியாளராக இருப்பதாகவும், உன்னை நினைத்து பெருமையாக இருப்பதால் தான் இங்கு வந்தோம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர். இதனைத் தவிர, சக போட்டியாளர்கள் குறித்தும், இன்னும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அவர்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

Shivin about her mother and saree incident emotional bigg boss

முன்னதாக, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியே இருந்து அடிக்கடி மற்றவர்கள் அனுப்பும் பொருட்கள் வரும். அப்போது தனது புடவை ஒன்று வர, அதனை தனது தாய் தான் அனுப்பி வைத்திருந்தார் என ஷிவின் பேசி இருந்தார். அப்படி ஒரு சூழலில், அதனை தனது தோழி தான் எடுத்து அனுப்பினார் என்பதையும் தற்போது அவர் ஷிவினிடம் கூறி உள்ளதாக தெரிகிறது.

Shivin about her mother and saree incident emotional bigg boss

இது பற்றி ரச்சிதாவிடம் பேசிக் கொண்டிருக்கும் ஷிவின், "அந்த சாரி கூட அம்மாகிட்ட இருந்து வரல. இவ தான் எடுத்து அனுப்பி இருக்கா. ஆனா, நான் அம்மான்னு நெனச்சு ஃபீல் பண்ணத Telecast பண்ணி இருக்காங்க" எனக் கூறியபடியே கண்ணீர் விட தொடங்க, அவர் அருகே இருக்கும் ரச்சிதா அவரை தேற்றவும் செய்கிறார்.

தனது தாய் மற்றும் சகோதரி பற்றி நிறைய பேசியுள்ள ஷிவின், தற்போது பிக்பாஸ் Freeze டாஸ்க்கில் அவர்கள் வராததை எண்ணி சற்று வேதனை அடைந்திருந்தார். அப்படி ஒரு சூழலில், தனது தாய் தான் அந்த சேலையை அனுப்பி இருப்பார் என ஷிவின் கருதி வந்த நிலையில், தற்போது அதையும் தோழி தான் செய்துள்ளார் என தெரிய வந்ததும் அதனை எண்ணி மன வேதனையில் அப்படி கண்ணீர் விடுகிறார். இதனைக் காணும் பார்வையாளர்கள் கூட, பெரிய அளவில் கண் கலங்கி போனது குறிப்பிடத்தக்கது.

Also Read | வம்புக்கு வந்த ட்விட்டர்வாசியை பங்கமாக செஞ்சு விட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.. "மனுஷன் சேட்ட புடிச்ச ஆளுங்க 😅"

Tags : #BIGG BOSS #BIGG BOSS TAMIL #BIGG BOSS TAMIL 6 #SHIVIN #BIGG BOSS TAMIL FREEZE TASK #SHIVIN ABOUT HER MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shivin about her mother and saree incident emotional bigg boss | Tamil Nadu News.