அமுதுவை உள்ளே போகச் சொன்ன ஜனனி.. 'ஃபேவரைட்டிஸமா'?.. ஷிவின் வைத்த விமர்சனம்..!! பரபரக்கும் BIGG BOSS TAMIL
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.
மேலும், பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளித்து வருவதுடன் அவர்கள் பற்றிய கருத்தையும் தெரிவித்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விஷயம், தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெறும். இப்படி ஏகப்பட்ட பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதற்கடுத்து மற்ற போட்டியாளர்கள் புதிய டாஸ்க்கில் தங்களின் திறனை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.
கடந்த வாரம் சினிமா கதாபாத்திரங்களாக போட்டியாளர்கள் மாறி இருந்த நிலையில், சண்டைகள் குறைவாகவும் அதே வேளையில் சுவாரஸ்யம் மற்றும் வேடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் அதிகமாகவும் இருந்தது. ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாக இந்த வார டாஸ்க் அமைந்திருந்தது. ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் சண்டை உருவாகி இருந்த நிலையில், சற்று பரபரப்பும் நிலவி இருந்தது.
‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற இந்த வார டாஸ்க்கின்படி, எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்கான குறுக்கு வழி எது என கண்டுபிடித்து சென்றால்? அப்படி செல்ல ஒரு குறுக்கு வழி இருந்து, அதன் வழியே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. எப்படி இருக்கும் என்பதே இந்த டாஸ்க். இதிலும் வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்படுவார்கள்.
இப்படிப்பட்ட பல விதிமுறைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க் நடந்துள்ளது. அப்படி ஒரு சூழலில், ஜனனி மற்றும் ஷிவின் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
ஆட்களை மாற்றுவது குறித்து சொர்க்கவாசிகள் இடையே நடந்த விவாதத்தில், ஜனனி மற்றும் ADK ஆகியோர் வெளியே செல்ல மறுத்ததாக தெரிகிறது. நரகவாசி கதிரவனை கட்டிப் போடாத விஷயத்தை ஷிவின் மீது முன் வைக்கிறார் ஜனனி. ஆனாலும், ஜனனி தான் போக வேண்டும் என்று முடிவானது. இதனிடையே, தனது கேரக்டரை பார்த்து தான் ஏஞ்சலாக தேர்ந்தெடுத்ததாக ஷிவின் கூறி இருந்ததும் சற்று குட்டையை கிளப்பி இருந்தது. இதன் பெயரில், ஜனனி அதிருப்தி அடைந்ததாகவும் தெரிகிறது.
இதற்கடுத்து நரகவாசிகள் ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால், இரு அணிகள் இடையே தள்ளுமுள்ளு உருவாக, அமுதவாணன் வெற்றிகரமாக வீட்டிற்குள் சென்று விட்டார். அப்போது அவரை தேற்றும் வகையில், ஜனனி உற்சாகமாக பேசியதை கவனித்த ஷிவின், அமுதவாணன் உள்ள போகணும்ன்னு நினைத்தது ஃபேவரைட்டிஸம்" என தெரிவித்தார்.
ஒரே அணியில் இருப்பவர்களை தேற்றுவது சாதாரண காரியமாக இருந்தாலும், கதிரவனை வேண்டுமென்றே ஷிவின் தப்பிக்க விட்டதாக ஜனனி முன்பு குறிப்பிட்டதற்காக தான் ஷிவின் அப்படி கூறினார் என்பதை வெளிப்படையாக கூறி விட்டார்.

மற்ற செய்திகள்
