இந்தியாவையே பதற வைத்த ஷ்ரத்தா வழக்கு.. அஃப்தாப்பின் கோபத்துக்கு காரணம் இதுதான்.. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் .. கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு.!
டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார். அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடிக்கடி காதலியுடன் சண்டை போட்டு வந்ததன் பெயரில் கடும் ஆத்திரத்தில் இருந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டுகளையும், ஷ்ரத்தாவை கொலை செய்ததையும் அஃப்தாப் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசி இருந்த நிலையில், அந்த இடங்களையும் அஃப்தாப் போலீசாரிடம் அடையாளம் காட்டி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நேற்று 6,629 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த வழக்கு குறித்த முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கொலை நடந்த நேரத்தில் அஃப்தாப் பூனாவாலா பயன்படுத்திய ஆயுதங்கள் துவங்கி இந்த வழக்கின் சாட்சிகள் வரை அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பொறுத்த வரையில் 150 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த அன்று அஃப்தாப் மிகுந்த கோபம் அடைந்ததாகவும் அதற்கு காரணம் ஷ்ரத்தா தனது நண்பரை சந்திக்க சென்றது அவருக்கு தெரியவந்ததே என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய காவல்துறை இணை ஆணையர் மீனு சவுத்ரி,"குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஷ்ரத்தா தனது நண்பரை சந்திக்க சென்றது பிடிக்கவில்லை.. அன்று இரவே கொலை நடந்திருக்கிறது" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து மக்களும் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.