"சிட்டிக்கு உயிர் வந்துருச்சு".. பீஃப் பிரியாணி சாப்பிட்ட விக்ரமன் பத்தி ராம் கமெண்ட்.. சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 19, 2023 08:49 PM

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், தற்போது மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்கள் மட்டும் மீதம் இருப்பதாக தெரியும் நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் யார் இந்த முறை டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட போகிறார்கள் என்பது பற்றியது தான்.

Ram says vikraman happy after eat beef biriyani

Also Read | ஒண்ணா சேர முடியாதுல்ல".. காதல் ஜோடி எடுத்த சோக முடிவு... சிலைகளுக்கு திருமணம் நடத்தி கண்ணீர் விட்ட குடும்பத்தினர்.!

Finale வரை முன்னேறி இருந்த கதிரவன் மூன்று லட்ச ரூபாய் பணமூட்டை எடுத்துவிட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது சுமார் 10 லட்சம் ரூபாய் தாண்டி சென்று கொண்டிருப்பதாகவும், தற்போது உள்ள எந்த போட்டியாளர்களும் இதுவரை அதை எடுக்க முன்வரவில்லை என்றும் தெரிகிறது.

மறுபக்கம் விக்ரமன், அசிம், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஷிவின் ஆகியோர் Finale-வுக்கு முன்னேறி உள்ள நிலையில், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றியும் தங்களின் கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Ram says vikraman happy after eat beef biriyani

இதனிடையே, தற்போது கடைசி வாரம் வந்துள்ள நிலையில், பிக் பாஸ் ஒரு டாஸ்க் போல ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது வீட்டின் கார்டன் பகுதியில் பெரிய காது ஒன்று வைக்கப்பட, இறுதி சுற்று வரை முன்னேறி உள்ள போட்டியாளர்கள், தங்களுக்கு மட்டும் தேவையான உணவு வகைகள் என்ன வேண்டும் என்பதை அதில் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது. மற்ற போட்டியாளர்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் விவாதிக்காமல் தங்களுக்கு மட்டும் என்ன தேவையோ அந்த உணவு வகைகளை காதில் தெரிவிக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தது.

Ram says vikraman happy after eat beef biriyani

அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு விதமான உணவை கேட்க, பீஃப் பிரியாணி, பிரெட் அல்வா போன்ற விஷயத்தை விக்ரமன் கேட்டிருந்தார். கேட்ட உணவு வந்து சேர்ந்திருந்த நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடனும் விக்ரமன் உண்டதாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், பீஃப் பிரியாணி சாப்பிட்ட சமயத்தில், விக்ரம் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பது பற்றி ராம் பேசுகிறார். அசல் கோலார், மகேஸ்வரி, அமுதவாணன், ராம் மற்றும் விக்ரமன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். அப்போது பேசும் ராம், "நேத்து பீஃப் பிரியாணி சாப்பிட்டதும் மனுஷன் சந்தோஷமா இருந்தாரு. மூஞ்சில சிரிப்பு இருந்தது. இந்தா பிரெட் அல்வா சாப்பிடுங்கன்னு என்கிட்ட சொன்னாரு. சிரிப்பு வந்துருச்சு பரவாயில்ல, சிரிக்கிறாரு சிட்டிக்கு உயிர் வந்திருச்சுங்குற மாதிரி இருந்துச்சு" என ராம் கூறியதும் அனைவருமே சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

Ram says vikraman happy after eat beef biriyani

இதனைத் தொடர்ந்து பேசும் விக்ரமன், நானும் ராமும் நிறைய முறை Vibe செய்திருக்கிறோம் என்றும், பாத்திரம் கழுவும் நேரத்தில் நடந்த சம்பவம் குறித்தும் பேசுகிறார். இது பற்றி தொடர்ந்து அனைவரும் ஜாலியாக பல்வேறு கருத்துக்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர்.

Also Read | 200 ரன்கள் அடித்த சுப்மன் கில்.. அதுக்காக ஷர்துல் செஞ்ச தியாகத்தை யாராச்சும் கவனிச்சீங்களா?"

Tags : #BIGG BOSS #BIGG BOSS TAMIL #BIGG BOSS 6 TAMIL #RAM #VIKRAMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ram says vikraman happy after eat beef biriyani | Tamil Nadu News.