“பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்”.. வேற லெவலில் எதிர்பார்த்த ரசிகர்கள் .. அடுத்த நொடி குயின்ஸி செய்த தரமான சம்பவம்.. BIGG BOSS
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியினர் Vs ஏலியன்கள் டாஸ்க் தொடங்கியுள்ளது.

இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். இவர்களின் அணி அடுத்தடுத்த நாட்களில் இடம் மாறக்கூடும்.
இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
அப்படி போகும் போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம்.
இதில் பூக்களை எல்லாம் பழங்குடியை சேர்ந்த அசீம் ஏலியன்களின் பகுதியில் இருந்து திருடி சென்றுவிட்டார். இரவோடு இரவாக நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, அதே இரவில் விழித்துக்கொண்டு பாத்ரூம் வந்த குயின்ஸி நினைத்தால் பெரிதாக்கியிருக்கலாம். ஏனென்றால் பாத்ரூம் சென்றுவிட்டு வரும் குயின்ஸி பூக்களை பார்வையிடுகிறார். அங்கு பூக்கள் காணவில்லை. இதை பார்த்த ரசிகர்கள், “என்ன அலறுவாங்கனு பார்த்தா.. பெட்ரூம்ல போயி இழுத்து போர்த்திகிட்டு தூங்குறாங்க” என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆம், பூக்கள் காணாமல் போனதை பார்த்து சற்றும் அதிர்ச்சியடையாத, அலட்டிக்கொள்ளாத குயின்ஸி, தன் பாட்டுக்கு பெட் ரூமுக்கு சென்று தூங்க தொடங்கிவிட்டார். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் என்கிற ரேஞ்சுக்கு வந்த குயின்ஸி அடுத்த செகண்ட் தானும் சென்று ஓய்வெடுக்க தொடங்கிவிட்டார் என க்யூட்டாக கலாய்த்து வருகின்றனர்.
குயின்ஸியை பொருத்தவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் நீடித்து வருகிறார். பெரும்பாலும் யாருடனும் சண்டையிடாத குயின்ஸிக்கு ஒரே ஒரு முறை ஜனனியிடம் சண்டை வந்தது. இதேபோல் அசீம் பலமுறை கமல்ஹாசன் முன்னிலையில் குயின்ஸி மீது குறைகளை சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | “தொடல.. கட்டிப்பிடிக்கல.. க்ரஷ் மட்டும்தான்.. மனசுல என்ன இருக்குனு ரச்சிதா சொல்லணும்”.. ராபர்ட் EXCLUSIVE

மற்ற செய்திகள்
