"இருக்குடி மாப்ள உனக்கு".. ஜனனி விஷயத்தில் சரமாரியாக கேள்வி கேட்ட அமுதுவின் மனைவி .. விக்ரமன் THUG LIFE 😅
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் Freeze டாஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்தது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் வந்து பகிர்ந்து கொண்ட விஷயம், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், அவர்களுக்காக கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
அப்போது அமுதவாணன் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் உள்ளே வந்திருந்தார்கள். அந்த சமயத்தில், ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போது அமுதவாணன் அதிகம் கண்ணீர் விட்டது பற்றி அவரது மனைவி உள்ளே வரும்போது பேசி இருந்தார். ஜனனி வெளியேறும் போது கண்ணீர் சிந்தியது குறித்து நிறைய கேள்விகளை அவர் எழுப்ப இதற்கான விளக்கத்தையும் அமுதவாணன் கொடுத்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில், இதுகுறித்து அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோர் பேசிக் கொண்டிருப்பது தொடர்பான விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.
இதில் "உங்கள் மனைவி கரெக்டாக ஜனனி எலிமினேஷன் சமயத்தில் நடந்ததை பிடித்து கேட்டு விட்டார்" என விக்ரமன் அமுதவாணனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து விளக்கம் கொடுக்கும் அமுதவாணன், "எனது மனைவிக்கு என்னை பற்றி தெரியும். அதே மாதிரி ஜனனி வெளியே போனது என்னால தாங்கிக்க முடியல கஷ்டமா தான் இருந்தது. வேற மாதிரி இருந்தா மனைவி கிட்ட இப்படி ரெஸ்பான்ஸ் இருந்துருக்காது. அவங்களுக்கு என்ன தெரியும்" என விளக்கம் கொடுக்கிறார். அதே போல அமுதவாணனுக்கு தனது மனைவி வந்த சமயத்தில் மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், சுற்றி ஹவுஸ்மேட்ஸ் வந்த போது இன்னும் பதற்ற சூழ்நிலையை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த சமயத்தில் கடைசியாக பேசும் விக்ரமன், "இருக்குடி உனக்கு" என்றும் விளையாட்டாக அமுதவாணனை குறிப்பிடுகிறார்.