"வெளிய போய் கல்யாணம் பண்ணிக்கங்க".. சக போட்டியாளர் குறித்து ஷிவினை கலாய்த்த தனா, ஜனனி, அமுது.. நள்ளிரவில் நடந்த உரையாடல்.. BIGG BOSS 6
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.

அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.
முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.
டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.
நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். அதன்படி, பலரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்கள் பெயரை அறிவித்திருந்தனர்.
புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொரு வழக்கும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் அமுதவாணன், ஷிவின், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்த விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
அப்போது விக்ரமன் மற்றும் ஷவின் பற்றி அவர்கள் பேசி கொண்டிருக்க, "உன் ஆளு விக்ரமன்னு தெரியும்" என தனலட்சுமி ஷிவினிடம் கூற, ஜனனியும், "உன் லவ்வர் விக்ரமன்னு தெரிஞ்சு போச்சு" என்கிறார். இது தொடர்பான கருத்து நீண்டு கொண்டே போக, அமுதவாணன் ஜனனிக்கு அண்ணன் மாதிரி தானே என கூறிக் கொண்டு, அதனை அமுதவாணன் மற்றும் ஜனனியிடம் நேரடியாக கேட்டு ஆமாம் என நிரூபிக்கும் தனலட்சுமி, அதே போல உனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு என்ன என ஷிவினிடம் கேட்கிறார்.
இதற்கு ஷிவினும், அவர் எனக்கு அண்ணன் மாதிரி என கூற, "வாங்கோண்ணா, போங்கோண்ணா அந்த மாதிரி அண்ணாவா?" என சிரித்துக் கொண்டே கேட்கிறார் ஜனனி. ஷிவின் தன்னை தான் அண்ணன் என கூறுவதாக அமுதவாணன் விளக்க, "இல்லை, விக்ரமனை தான் அப்படி சொல்கிறார்" என ஜனனி விளக்கம் கொடுக்கிறார்.
இதற்கிடையே பேசும் தனலட்சுமி, "வெளிய போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க" என சொல்வதும் கேட்கிறது.

மற்ற செய்திகள்
