"பிக்பாஸ் இந்த மாதிரிலாம் கொடுக்க மாட்டாரு".. மைனாவின் டாஸ்க்கை செய்ய மறுத்த விக்ரமன்.! இதான் விஷயமா? BIGG BOSS 6 TAMIL

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 14, 2023 06:28 PM

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

vikraman opt out from task given by myna bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்கள் வந்து போகின்றனர். இந்நிலையில் எலிமினேட் ஆகி மீண்டும் மகேஸ்வரி, மணிகண்டா, மைனா நந்தினி, தனலட்சுமி, அசல் கோலார், நிவாஷினி, ஷெரினா, ஆயிஷா மற்றும் ஜிபி முத்து ஆகிய போட்டியாளர்கள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.  இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸிற்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல ஹவுஸ்மேட்ஸ் பிக் பாஸாக மாறியும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, விக்ரமன் சற்று சோர்ந்து போய் அமர்ந்ததாகவும் தெரிகிறது. முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் கொட்டாவி விட்டது பெரிய அளவில் டிரெண்டிங்கான விஷயமாக மாறி உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் சற்று சோர்ந்து போயிருக்கும் நிலையில் அவரிடம் பேசும் ADK, "கதிரவன் ஒன்னு சொன்னாரு இந்த வீட்ல எது செஞ்சாலும் தப்பு, எது செஞ்சாலும் சரி. அந்த மாதிரியான ஒரு வீடு இது. அதனால அதை மைண்ட்ல எடுத்துக்காதீங்க. முதல்லயே பார்த்தேன், நீங்க இப்படி ஓரமா வந்து உக்காந்துட்டீங்க. அடுத்தவங்களோட வாழ்க்கையை கெடுக்காத வரைக்கும், அடுத்தவங்க சொன்னதை கோள்மூட்டி விடாத வரைக்கும், அடுத்தவங்க நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்காத வரைக்கும் நம்ம எல்லாரும் நல்லவங்க தான். நீங்க இங்க வந்ததுக்கு உங்க கேரக்டர் Establish பண்ணி இருக்கீங்க. நீங்க கரெக்டா தான் இருந்துருக்கீங்க" என விக்ரமனை ADK தேற்றவும் செய்கிறார்.

மேலும் அந்த விஷயம் உங்கள் மனதை புண்படுத்தி விட்டதா என ADK கேட்க, அதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "ஆமா கொட்டாவி விட்டது ட்ரெண்ட் ஆகுது அப்படிங்குறப்போ எனக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. ஆரம்ப காலத்தில் எனக்கு இந்த இடம் புதுசு. இன்னொண்ணு வந்த உடனே காய்ச்சல். உடம்பு முடியாம ஆகி செட்டில் ஆகுறதுக்கே இரண்டு வாரம் ஆயிடுச்சு. சில நேரங்கள்ல வேகமா கூட என்னால நடக்க முடியாது. நடப்பேன், ஆனா மூச்சு வாங்கும். டாக்டரே சொல்லி இருக்காங்க. அது இப்படி போகுது அப்படிங்குற போது கஷ்டமா இருக்கு" என விக்ரமன் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஜெண்டர் டாஸ்க் விவாதம் போகிறது. அதன்படி மைனா பிக்பாஸாக இருக்கும்போது ஜெண்டர் டாஸ்க் கொடுக்க, இதில் மைனா, ஆயிஷா மற்றும் தனா ஆகியோருக்கு ஆண்கள் கேரக்டர்கள் கொடுக்கப்பட்டன.  இதில்தான் விக்ரமன் உண்மையான பிக்பாஸாக இருந்தால் இப்படியான டாஸ்க்கெல்லாம் தரமாட்டார் என விமர்சிக்கிறார். மேலும் பிடிச்சவங்க பண்ணட்டும். கட்டாயப்படுத்தாதீங்க என சொல்கிறார். அதற்கு மைனா, முத்து ஆகியோர், “அது தப்பா? அது தப்பில்ல விக்ரமன்” என சொல்கிறார்கள். ஆனால் விக்ரமனோ, பிடிச்சவங்க மட்டும் மாறட்டும் என தன் கருத்தை மீண்டும் ஆழமாக தெரிவித்தார்.

Tags : #BIGG BOSS 6 TAMIL #BIGG BOSS TAMIL #MYNA #VIKRAMAN #BIGG BOSS NEW PROMO #BIGG BOSS TODAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vikraman opt out from task given by myna bigg boss 6 tamil | Tamil Nadu News.