2019ம் ஆண்டுக்கான சிறந்த 'புகைப்படம்'... '48,000' புகைப்படத்திலிருந்து தேர்வு... புகைப்பட ஆர்வலர்களின் 'பார்வைக்கு'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 12, 2020 10:17 PM

சுரங்க ரயில் நிலையம் ஒன்றில், சண்டையிட்டுக் கொள்ளும் 2 எலிகளின் புகைப்படம், 2019ம் ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Photo of the 2 rats fighting, the best photo of the year 2019

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியமில், 2019ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படத்துக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சுமார் 48 ஆயிரம் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் 25 புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் 2 எலிகள் உணவுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இப்புகைப்படத்தை எடுத்த சாம் ரோவ்லி சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வென்றார். இந்த புகைப்படம் வரும் மே மாதம் இறுதி வரை நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

Tags : #LONDON #BEST PHOTO #2 RATES FIGHTING #ENGLAND #PHOTOGRAPHY