'போலீஸ்' பூத் மேல் கார் மோதி விபத்து... "ஐயோ பாவம்..." "ஆனா அதை செல்ஃபி எடுத்து ட்விட்டர்ல போட்ட பாரு..." "நீங்கதான் தம்பி முக்கியமான ஆளு..."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 12, 2020 09:31 PM

விலை உயர்ந்த லம்போர்கினி கரை தறிகெட்டு ஓட்டி வந்த ஒருவர் சாலையோரம் இருந்த போலீஸ் பூத் மீது மோதியதுடன் அதை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் கடுப்பான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Luxury car collides with police booth-Man arrested

லம்போர்கினி சொகுசுக் காரை ஓட்டி வந்தவர் தொழிலதிபரின்  மகன் சன்னி சபர்வால் என்பது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிடிஓ சர்க்கிள் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. விபத்து நடைபெற்ற உடனேயே சன்னி சபர்வால் அங்கிருந்து தப்பி விட்டார். அப்படியே சென்றிருந்தால் பரவாயில்லை. விதி யாரை விட்டது.

சிறிதி நேரத்திற்கு பிறகு சன்னி சபர்வால் அங்கு மீண்டும் வந்துள்ளார். கடுமையாக சேதமடைந்த போலீஸ் பூத் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களே அவருக்கு எமனாக வந்துள்ளது. வைரலாக பரவ தொடங்கிய அந்த புகைப்படங்கள் போலீஸ் கண்ணிலும் படவே சன்னி சபர்வாலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளனர்

 

Tags : #CAR ACCIDENT #LAMBORGHINI #COLLIDES #POLICE BOOTH