'என் குழந்தையை மலையிலேயே பொதச்சுட்டேன்...' 'மாமியாருடன் சண்டை, மலையேறிய மருமகள்...' மோப்ப நாய் மூலம் உடல் மீட்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 13, 2020 10:42 AM

ஆந்திர மாநிலத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது பெண் குழந்தையுடன் மலை மீது குடியேறிய மருமகளை போலீசார் தேடி கண்டுபிடித்த நிலையில், குழந்தை இறந்துவிட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The infant died after fighting with her mother-in-law

விசாகப்பட்டினம் அருகே பெண்டுர்தி கிராமத்தை சேர்ந்த அப்பாராவின் மனைவி குஷ்மலதா தனது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது பெண் குழந்தையுடன் அருகே உள்ள மலைக் குன்றின் மீது குடியேறியுள்ளார். அப்பாராவ் அளித்த புகாரின் பேரில் மலைப்பகுதியில் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் தேடுதலுக்கு பின் குஷ்மலதாவை போலீசார் கண்டுபிடித்தனர்.

அப்போது குழந்தை எங்கே என்று போலீசார் கேட்டபோது, மலைப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் குழந்தை இறந்துவிட்டதாகவும், அதனை மலையிலேயே புதைத்துவிட்டதாகவும் குஷ்மலதா கூறியுள்ளார். இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா எனத் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Tags : #MOUNTAIN