கிணத்துக்குள்ள போற தண்ணி 'எங்க' போகுது...? 'நிரம்பவே மாட்டேங்குது...' - இப்படியும் ஒரு 'அதிசய' கிணறா...!?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒருவார காலமாக கிணற்றுக்குள் தண்ணீர் செலுத்திக்கொண்டே இருந்தாலும் நிறையாமல் இருக்கும் அதிசய கிணறு நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடர்ந்து பெய்ந்த கனமழை காரணமாக பல கிராமங்களில் விளைச்சல் நிலத்தில் தண்ணீர் புகுந்து விவசாயிகளை கவலைக்குள் ஆழ்த்தியது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஒரு விவசாயி தன் விவசாய நிலத்தில் இருந்த நீரை கிணற்றுக்குள் திருப்பிவிட்ட போது ஒரு அதிசயகிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி ஆலங்குளம் பகுதியில் இருக்கும் வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ். இவரின் கிணற்றை தான் தற்போது அந்த ஊர் மக்கள் அதிசய கிணறாக வந்துவந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.
இதுக்குறித்து கூறும் முருகராஜ், 'என்னோட சொந்த ஊர் ஏந்தலூர் கிராமம்தான். எனக்கு இங்க இருக்கும் 10 எக்கார் நிலத்தில் எலுமிச்சை, தென்னை, நெல், கத்தரி, மரவள்ளி, தக்காளி பயிரிட்டு வரேன்.
கடந்த சில வாரங்களா இங்க அதிகமழை பெஞ்சிட்டு வருது. அதனால என் நிலம் பக்கத்துல இருக்குற கல்கட்டிகுலத்தில . தண்ணீர் முழுசும் நிறைஞ்சி கடந்த வாரத்தில் மறுகால் போயிருச்சு.
இப்போ குளத்தில் இருந்து வெளியவரும் தண்ணீர் ஸ்ட்ரைட்டா என்னோட விவசாய நிலத்துக்கு உள்ளேயும் வந்துருச்சு. முதல்ல அத எப்படி வெளியேத்தறதுன்னே எனக்குப் புரியலை. அப்போதான் காய்ந்து கிடந்த என்னோட கிணத்துக்குள் உபரி நீரைத் திருப்பி விட்டேன்.
கடந்த ஒரு வாரமா என்னோட விவசாய நிலம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் தொடர்ந்து பாய்கிறது. ஆனா கிணறு நிரம்பாமல் இருக்குறத பார்த்ததும் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.
அதனால் இதபத்தி பக்கத்து விவசாயிகளுக்குச் சொன்னேன். அவங்களும் வந்து பாத்துவிட்டு, அதிசய கிணறு மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. இப்போ வர கிணற்றுக்குள் போகும் தண்ணீர் எங்கே போகுதுன்னே தெரியலை' என ஆச்சரியமாக கூறினார்.
இதற்கு முன்பும் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தில் ஒரு கிணற்றுக்குள் 15 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்துசெல்லும் தண்ணீர் சென்றுகொண்டே இருந்தாலும் அந்த அதிசய கிணறும் நிறையவே இல்லையாம்.