கொஞ்சம் சீக்கிரமா வந்து இது 'என்ன'னு பாருங்க...! 'கிணறு தோண்டினப்போ கிடைச்சிருக்கு...' சர்வதேச சந்தையில 'இதோட' மதிப்பு 745 கோடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல், இலங்கையில் ஒரு வீட்டில் கிணறு தோண்டும்போது கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் ரத்தினங்கள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை ரத்தின தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் கமாகே என்பவர் வசித்து வருகிறார். இவர் ரத்தின வியாபாரம் செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கமாகே தன்னுடைய வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளார்.
மண்ணை தோண்டி அகற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கல் தட்டுப்பட்டுள்ளது. முதலில் இது சாதாரண கல் என்றே நினைத்துள்ளனர். ஆனால், இது சாதாரண கல்லாக இருக்க முடியாது என்றும் தோன்றியது.
உடனே அந்த கல்லை ஆய்வு செய்தனர். அப்போது தான் அது உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் என்று தெரிய வந்தது. இதன் மொத்த எடை 510 கிலோ. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல் சர்வதேச சந்தையில் இந்திய மதிப்பின்படி 745 கோடி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரியான கமாகே கூறுகையில், “கிணறு தோண்டும்போது ஒரு வித்தியாசமான கல் கிடைத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். நாங்கள் அதைக் கண்டதும் ஆச்சரியத்தில் வியந்து போனோம்" என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
