'சிங்கிள் டீ' குடிச்சிட்டு வர்றதுக்குள்ள 'இப்படி' பண்ணிட்டாங்களே...! 'கண்ணீர் வடித்த பிச்சைக்காரர்...' - சிசிடிவி செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசியில் பிச்சைக்காரரிடம் இருந்து லட்சக்கணக்கில் திருடிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகையா. காலில் ஏற்பட்ட காயம் மற்றும் வயது முதிர்வு காரணமாக கடந்த பத்து வருடங்களாக சங்கரன்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். சாப்பிடுவது, மருந்து வாங்குவது உள்ளிட்ட தன்னுடைய செலவுகள் தவிர மீதமுள்ள பணத்தை மூட்டையாக கட்டி தலையில் சுமந்துக்கொண்டு தான் நடமாடுவார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தன்னிடமிருந்த மூட்டையை சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் ஒரு டீக்கடையின் முன்பு வைத்துவிட்டு உள்ளே சென்று டீ குடிக்க போயுள்ளார். டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது மூட்டையை காணவில்லை.
அந்த கடையில் இருந்தவர்களிடம் தன்னுடைய மூட்டை குறித்து கேட்டுள்ளார். ஆனால், யாருக்கு அவரது மூட்டையை குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அதில், சிறுக சிறுக சேர்ந்த பணம் 2 லட்சம் இருந்ததாக கடைக்காரர்களிடம் கூறீ கண்ணீர் விட்டு அழுதார்.
இதனையடுத்து, காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததை சொல்லி புகார் அளித்துள்ளார். திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிசிடிவி வீடியோவில் முதியவர் சண்முகையா மூட்டையை கடை முன்பு இறக்கி வைத்து விட்டு உள்ளே செல்வதும் அதனை மர்ம நபர் ஒருவர் தூக்கிச்சென்றதும் தெரிய வந்ததுள்ளது.
தீவிர விசாரணையில், முதியவரின் மூட்டையை தூக்கிச் சென்ற நபர் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
அதேப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், உலகநாதன் ஆகியோர் இணைந்து தான் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.

மற்ற செய்திகள்
