'ஊரடங்கு நேரம்'... 'காலியான' சாலையில் "அசுர" வேகத்தில் வந்த 'கார்'... நடந்து சென்ற மூவருக்கு நேர்ந்த 'பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 22, 2020 02:49 PM

தென்காசி மாவட்டம் அருகே வீ.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது அதிக வேகத்தில் வந்த கார் மோதி மூன்று பெரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car accident in Tenkasi and three people died

தென்காசி மாவட்டம் கழுநீர்குளத்தை சேர்ந்தவர்கள் மாடசாமி, மருதாலயபாண்டியனின் மனைவி துரைச்சி, முத்துபாண்டியின் மனைவி பொன்னம்மாள் ஆகியோர் காலை 7 மணியளவில் அருகேயுள்ள தோட்டத்திற்கு புள் அறுக்க சென்றுள்ளனர். அப்போது அத்தியூத்து - சுரண்டை சாலை அருகே நடந்து கொண்டிருந்த போது இவர்கள் பின்னால் அதிக வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியதில் சுமார் 10 அடி வரை தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓடி வந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பலியான மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் போலீசார் நடத்திய விசாரணையில் அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்த ஜோன்ஸ் அந்தோணி என்பது தெரிய வந்தது. அந்தோணி, தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கின் போதும் ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமத்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.