அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்.. கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட ‘உகாண்டா’ பெண்.. விசாரணையில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் வயிற்றுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | “டீம் செலக்சன்ல அவரோட தலையீடும் இருக்கு”.. KKR அணியின் முக்கிய நபர் மீது குற்றம் சுமத்திய ஸ்ரேயாஸ்..!
கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. கடந்த 6-ம் தேதி ஷார்ஜா விமானத்தில் கோவைக்கு வரும் பெண் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விமானம் கோவைக்கு வந்ததும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கேப்சூல் வடிவில் போதைப்பொருளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் அவர் கடத்தி வந்த பொருளை வெளியே எடுப்பதற்காக அப்பெண்ணை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரது மனைவி சேன்ட்ரா நன்டசா (வயது 33) என்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது வயிற்றில் இருந்து 81 மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையான போதைப்பொருள் என்பதை கண்டறிய ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் அது ‘மெத்ராபெத்தமின்’ என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உகண்டா பெண் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8