"என் மகனோட பிறந்த தேதி-ல லாட்டரி வாங்குனேன்"..மதுரையை சேர்ந்த தொழிலாளிக்கு அபுதாபியில் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அபுதாபியில் மதுரையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது.
அபுதாபி பிக் டிக்கெட்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஒவ்வொரு வாரமும் அபுதாபி பிக் டிக்கெட் எனப்படும் லாட்டரி குலுக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான குலுக்களில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 1.05 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது. இது அமீரக வாழ் தமிழர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டம்
கடந்த ஒன்பது வருடங்களாக அமீரகத்தில் வசித்து வரும் மீனாட்சி சுந்தரம் துபாயிலுள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களாக அபுதாபி பிக் டிக்கெட்டில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். எப்போதும் தனது நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்களுடன் இணைந்து டிக்கெட்டை வாங்கும் மீனாட்சி சுந்தரம் இம்முறை தனியாகவே இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். சமீபத்தில் தாயகம் திரும்பி குடும்பத்தினருடன் தங்கி இருந்துவிட்டு அமீரகம் சென்ற மீனாட்சி சுந்தரம் தனது மகனுடைய பிறந்த தேதி வரும்படி டிக்கெட் எண்களை அமைத்துள்ளார்.
வரும் 24 ஆம் தேதி அவருடைய மகனுக்கு ஒரு வயது பூர்த்தியாக இருக்கிறது. ஆகவே தனது மகனின் பிறந்த தேதியான 24-5-2021 என்பதில் இருந்து முதல் மூன்று இலக்கங்கள் வரும்படி டிக்கெட் எண்ணை அமைத்திருக்கிறார் மீனாட்சி சுந்தரம். கடந்த மே 2 ஆம் தேதி 065245 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார் இவர். அதுதான் தற்போது அதிர்ஷ்டத்தை இவருக்கு வழங்கியிருக்கிறது.
ஆசை
இது குறித்துப் பேசிய மீனாட்சி சுந்தரம்," என்னுடைய மனைவி மற்றும் மகன் அமீரகத்திற்கு வந்ததேயில்லை. தற்போது இப்பணத்தின் மூலம் எனது ஆசையை நிறைவேற்ற உள்ளேன். எங்களது மிகவும் எளிமையான குடும்பம். கடந்த 5 வருடங்களாக அபுதாபி பிக் டிக்கெட்டில் கலந்துகொண்டு வருகிறேன். எப்போதாவது அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பினேன். அந்த நாள் இப்போது வந்திருக்கிறது. என்னுடைய மகனின் பிறந்த தேதியின் அடிப்படையில் வாங்கிய டிக்கெட்டில் பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பரிசு கிடைத்தாலும் நான் தொடர்ந்து பணியில் நீடிக்க இருக்கிறேன்" என்றார்.
இதுமட்டும் அல்லாமல் இவ்வெற்றியின் மூலம் வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள 20 மில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் 10 லட்சம் திர்ஹம்ஸ்க்கான பிரம்மாண்ட குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பும் மீனாட்சி சுந்தரத்திற்கு கிடைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8