மாமல்லபுரத்தில் மும்பை அழகியுடன் உல்லாசம்.. கடைசியில் வாலிபர்கள் செஞ்ச காரியம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மும்பை அழகியை சென்னைக்கு அழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு வாலிபர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | தஞ்சை தேர் விபத்தில் 200 பேர் உயிரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்.. வெளியான உருக்கமான தகவல்..!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருவதாக கூறியுள்ளார். ராஜேஷ் பணம் கொடுக்க சம்மதித்ததை அடுத்து அப்பெண் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார்.
இதனை அடுத்து மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து அப்பெண்ணுடன் ராஜேஷ் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் பின்னர் தனது நண்பர்களான தினதயாளன் (வயது 39), விஸ்வநாதன் (வயது 39) ஆகியோரை வரவழைத்துள்ளார். அப்போது அவர்களுடனும் தனிமையில் இருக்க இளம்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதன் பின்னர், அடுத்த நாள் காலை அந்தப் பெண் மும்பைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதனால் ராஜேஷிடம் பேசியபடி 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து அனுப்பியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்துப்போன இளம்பெண், இதுகுறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ராஜேஷ், தினதயாளன், விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்து, இளம்பெண்ணிடம் பறித்த செல்போன், பணத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி மும்பைக்கு போலீசார் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
