“டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க”.. முதியவருடன் சண்டை.. கோபத்தில் பக்கத்துவீட்டு வாலிபர் செஞ்ச அதிர்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிவியில் அதிகம் சத்தம் வைத்து பார்த்த முதியவருக்கு பக்கத்துவீட்டு இளைஞரால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சத்தம் அதிகமாக வைத்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பக்கத்து வீட்டுக்காரரான வீரமணி முதியவரின் வீட்டுக்குள் புகுந்து டிவியில் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் முதியவர் டிவி சத்தத்தை குறைக்க முடியாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி, பாத்ரூம் கழுவும் ஆசிட்டை எடுத்து முதியவரின் முகத்தில் வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த முதியவர் அலறி துடித்துள்ளார். முதியவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனை அடுத்து வீரமணியின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வீரமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிவியில் அதிக சத்தம் வைத்து பார்த்ததற்காக முதியவர் மீது பக்கத்து வீட்டு இளைஞர் ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
