நடிகரின் மரணம்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய முக்கிய புள்ளி.. வீட்டுக்குள்ள ஃபுல்லா பாட்டிலு.. கூடவே ரெண்டு பொண்ணுங்க வேற
முகப்பு > செய்திகள் > இந்தியாவங்க தேசத்தில் தொண்ணூறு காலகட்டங்களில், பிரபல நடிகராக வலம் வந்தவர் சோஹல் சவுத்ரி.

"ரெய்னா'வ எடுக்கல'ன்னு சொல்லி என்ன தான் திட்டுனாங்க.." பிரபல சிஎஸ்கே வீரர் பகிர்ந்த விஷயம்..
அந்த சமயத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டு திகழ்ந்த சோஹல் சவுத்ரி, கடந்த 1998 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் சில நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தொழில் போட்டி மற்றும் சினிமா வளர்ச்சி காரணமாக, சோஹல் கொலை செய்யப்பட்டதாகவும் அந்த சமயத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
பிரபல நடிகர் கொலை
ட்ரம்ப்ஸ் க்ளப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் சோஹல் கலந்து கொண்டார். அப்போது அவரை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று, அவரை சுட்டுக் கொலை செய்திருந்தது. நடிகரின் மரணம், அந்த சமயத்தில் வங்கதேச மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை தெடர்பாக, 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த ஒன்பது பேரில், தொழில் அதிபர் அஜீஸ் முகமது, ஆஷீஷ் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இரண்டு பேர் இந்த வழக்கில் இருந்து கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். அதில் ஒருவர் தான் ஆஷீஷ்ராய் சவுத்ரி. தொழில் அதிபரான இவரையும், போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
24 ஆண்டுகளாக தலைமறைவு
ஆனால், யார் கைகளிலும் அகப்படாமல் இருந்து வந்த ஆஷீஷ் ராய், போலீசாரிடம் இருந்து தப்பித்து வெளிநாடு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், சோஹல் சவுத்ரி கொலை வழக்கில் ஆஷீஷ் பல ஆண்டுகளாக சிக்காமல் இருந்து வந்தார். இன்னொரு பக்கம், சில முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பிலும் அவர் பணிபுரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில், சோஹல் கொலை வழக்கு, பல்வேறு பேரிடம் மாறிக் கொண்டே வந்தது. இதனிடையே, போலி பாஸ்போர்ட் மூலம், வங்கதேசத்துக்குள் ஆஷீஷ் ராய் மீண்டும் நுழைந்துள்ளதாகவும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சுற்றி வளைத்த போலீசார்
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்த ஆஷீஷ் ராயின் இடத்தினை வங்கதேச போலீசார் அறிந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக, அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்ட போலீசார், அந்த குடியிருப்பை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, ஆயுதங்களுடன் ஆஷீஷ் ராயின் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஷீஷ்
அப்போது, அந்த வீடு எங்கிலும் வெளிநாட்டு மதுபான பாட்டில்களும், ஆஷீஷ் ராயின் உடன் இரண்டு பெண்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அது போல, போலீசாரிடம் தான் ஏற்கனவே ஜாமீன் வாங்கி விட்டதாக கூறி, வாக்குவாதத்திலும் ஆஷீஷ் ராய் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், 24 வருடங்களுக்கு முன்பு பெற்ற ஜாமீன் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதாகவும் கூறி, ஆஷீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
எப்பவும் ஆன்லைன் கேம்.. கடைசி'ல இளைஞருக்கு நேர்ந்த நிலை.. பதைபதைப்பு சம்பவம்

மற்ற செய்திகள்
