மர்லின் மன்றோவின் ரெக்கார்டு பிரேக்கிங் ஓவியம்.. 4 நிமிஷத்துல முடிஞ்ச ஏலம்.. விலையை கேட்டா தலையே சுத்திடும்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | May 10, 2022 03:23 PM

உலகப் புகழ்பெற்ற நடிகை மர்லின் மன்றோவின் ஓவியம் ஒன்று 195 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.

Shot Sage Blue Marilyn Portrait Sold 195 million USD

Also Read | "என் மகனோட பிறந்த தேதி-ல லாட்டரி வாங்குனேன்"..மதுரையை சேர்ந்த தொழிலாளிக்கு அபுதாபியில் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான சுவாரஸ்யம்..!

மர்லின் மன்றோ

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை இன்னும் கொண்டிருக்கும் மர்லின் மன்றோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1926 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த மன்றோவின் வாழ்க்கையை மாற்றியது ஒரு புகைப்படம்தான். 1944 ஆம் ஆண்டு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த மன்றோவை புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். திரை உலகின் வாசல் மன்றோவுக்காக திறந்த தருணம் அது. ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்த மன்றோ, அதன் பின்னரே திரைத்துறைக்குள் நுழைந்தார். 1964 ஆம் ஆண்டு மன்றோ இறந்தாலும் இன்றும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Shot Sage Blue Marilyn Portrait Sold 195 million USD

ஓவியம்

அமெரிக்காவை சேர்ந்த கலைஞரான ஆண்டி வார்ஹோல் என்பவர் மர்லின் இறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து "Shot Sage Blue Marilyn" என்னும் ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியம் நேற்று புகழ்பெற்ற ஏல நிறுவனமான கிறிஸ்டிஸ் மூலமாக விற்பனைக்கு வந்தது. துவங்கிய நான்கு நிமிடங்களில் முடிந்த இந்த ஏலத்தில் 195.04 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய 1,509  கோடி ரூபாய்) இந்த ஓவியம் விற்கப்பட்டிருக்கிறது.

Shot Sage Blue Marilyn Portrait Sold 195 million USD

இதன்மூலம் 20 ஆம் நூற்றாண்டில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஓவியம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது இந்த ஓவியம். இதற்கு முன்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காஸோவின் "Women of Algiers" ஓவியம் 179.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானதே இதுவரையில் சாதனையாக இருந்தது.

வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியமாக அறியப்படுவது லியோனார்டோ டா வின்சியின் "சால்வடோர் முண்டி" ஆகும். 2017 ஆம் ஆண்டு இந்த ஓவியம் 450.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்தது.

Shot Sage Blue Marilyn Portrait Sold 195 million USD

முன்னதாக 200 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட மன்றோவின் இந்த ஓவியம் தற்போது 195.04 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #MARILYN #MARILYN PORTRAIT #SHOT SAGE BLUE MARILYN PORTRAIT

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shot Sage Blue Marilyn Portrait Sold 195 million USD | World News.