“பாட்டியை சரியா பாத்துக்க முடியல, அதனால தான்..!” பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த 2 பேத்திகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை அருகே பாட்டி மர்மமாக உயிரிழந்த வழக்கில் கைதான பேத்திகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலை அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் உள்ளது. இதன் அருகே உள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் கிடந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மூதாட்டி மரணம் குறித்து போலீசாரிடம் ரகசிய தகவல் அளித்தார். அதன் பேரில் பழையபேட்டை கிருஷ்ணபேரியை சேர்ந்த பொன் ஆறுமுகம்பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 30) மற்றும் இவரது சகோதரி செக்கடி தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மனைவி மேரி (வயது 38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி இவர்களது பாட்டி என்பதும், அவரின் பெயர் சுப்பம்மாள் (90 வயது) என்பதும் தெரியவந்தது. பேத்திகள் இருவரும் தான் பாட்டியை பராமரித்து வந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அவரை கண்காணிக்க முடியாததால், போலீசாரிடம் ரகசிய தகவல் அளித்தவரின் ஆட்டோவில் அழைத்து சென்று எரித்தாக இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அடுத்து பேத்திகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
