‘எல்லார் கிட்டையும் சொன்ன ஒரே பொய்’.. 5 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செஞ்ச ‘சென்னை’ வாலிபர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை சேர்ந்த வாலிபர் 5 கேரள பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஸ்கூட்டியில் வந்த பெண்.. திடீரென வழிமறித்து ‘தாய் மாமா’ செய்த அதிர்ச்சி காரியம்.. பரபரப்பு வாக்குமூலம்..!
சென்னையைச் சேர்ந்தவர் ஸிஜீஷ் (வயது 41). இவர் சென்னையில் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கேரளாவின் பல பகுதிகளில் உள்ள பெண்களை நம்ப வைத்து திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்களிடம் பணம் நகை இவற்றை பறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று மாதம் வரை அப்பெண்ணுடன் வாழ்த்துவிட்டு நகைகளுடன் மாயாகியுள்ளார்.
இந்த சூழலில் கடந்த மாதம் பாலக்காடு அருகே உள்ள அகத்தேதரா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் அப்பெண்ணிடமும் சென்னை ரெயில்வே நிர்வாகத்தில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகைகளை வாங்கியுள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.
ஆனால் அதன்பின் ஸிஜீஷ் அப்பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் பாலக்காடு ஹேமா அம்பிகை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஸிஜீஷ் பயன்படுத்திய செல்போன் எண்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பாலக்காடு அருகே இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார், ஸிஜீஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஏற்கனவே 5 பெண்களை இதுபோல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஸிஜீஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளுடன் சென்னை வாலிபர் மாயமாகி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
