“தம்பி தூங்கிட்டு இருக்கான்”.. வீட்டுக்குள் போக விடாமல் தடுத்த அண்ணன்.. உள்ளே போய் பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மது போதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை தீ வைத்து கொன்றுவிட்டு சடலத்துடன் அண்ணன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் ப்ரைட் (வயது 47). கொத்தனாரான இவருக்கு டென்னீஸ் (வயது 55) என்ற அண்ணன் உள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் குடும்ப தகராறு காரணமாக சகோதரர்கள் இருவர் மட்டும் தனியாக வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இருவரும் மது போதைக்கு அடிமையானர்வர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணன், தம்பி இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த டென்னீஸ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தம்பி ப்ரைட் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தம்பி இறந்தது தெரியாமல் மதுபோதையில் அவர் அருகிலேயே டென்னீஸ் படுத்து தூங்கியுள்ளார்.
இதனை அடுத்து காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்கு டென்னீஸ் தயாராக இருந்துள்ளார். அப்போது ப்ரைட்டை தேடி அவரது நண்பர் வந்துள்ளார். அப்போது டென்னீஸ் அந்த நபரிடம், ப்ரைட் தூங்குவதாக கூறிள்ளார். மேலும் வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டினுள் பார்த்தபோது ப்ரைட் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டென்னீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த ப்ரைட்டின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | பைக் விலை ரூ.71,000.. ஆனா நம்பர் ப்ளேட் ரூ. 15.4 லட்சம்.. அப்படி என்ன ஸ்பெஷல் நம்பர்..? மிரள வைத்த நபர்..!

மற்ற செய்திகள்
