'இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்!'.. ஒருவழியாக தேதி அறிவித்த மாநில தேர்தல் ஆணையர் | இன்றைய மேலும் பல முக்கியச் செய்திகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 02, 2019 10:19 AM

இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக ஓரிரு வரிகளில் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன. 

tamil news important headlines read here for December 2

1, ஆறு நாள் பயணமாக ஸ்வீடன் அரசர் கார்ல் 16-ம் குஸ்தஃப் மற்றும் ராணி சில்வியா புதுதில்லி வந்தடைந்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு நிகழ்த்தவுள்ளனர். 

2, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் செல்போன் நிறுவன கட்டணங்கள் நாளை முதல் 42% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே  நடூர் பகுதியில் கனமழையால் வீடு இடிந்து 17 பேர் மரணம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறச் செல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி.  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.

4, குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல பகுதிகளில்  மிதமான, சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

5, சையத் மோடி பேட்மிண்டன் போட்டி இறுதியாட்டத்தில் இந்தியாவின் சவ்ரப் வர்மா சீன தாய்பேய்  வீரரிடம் தோல்வியடைந்தார்.

6, சுமார் 12,500க்கும் மேற்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திய திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு பயமில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

7, மழையால் பாதிக்கப்படக்கூடிய 4399 இடங்களைக் கண்டறிந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

8, தொடர் மழை காரணமாக நாளை 02.12.19 திங்கள் கிழமை(இன்று) நடைபெறவிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

9, சென்னையில் மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

10, டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? இல்லை எடப்பாடி பழனிசாமியா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்துள்ளார். 

11. சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழக அரசு அளித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளது. 

12. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என பேசியிருந்த மாநில பாஜக துணைத் தலைவர் அரசகுமாருக்கு டெல்லியில் இருந்து பதில் வரும் வரை கட்சி நிகழ்ச்சிகள், ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு பதில் அளித்த பி.டி. அரசகுமார், தன் மீது நடவடிக்கை எடுக்க நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் தேசிய பொறுப்பாளர் முரளிதரராவிடம் இது பற்றி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

Tags : #செய்தி #NEWS #HEADLINES #TODAY