இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 22, 2019 10:25 AM

1. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமான தென்காசி மாவட்டத்தை, துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

tamil news important headlines read here for november 22

2. உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஏற்கனவே 2 முறை ஆலோசனை நடத்தியநிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

3. சட்டீஸ்கர் மாநிலம் பேமெட்ரா பகுதியில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு குளத்திற்குள் பாய்ந்து, விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

4. குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

5. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி, பொன்மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6. நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

7. நாட்டிலேயே, மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த, 21 வயதே ஆன மயங்க் பிரதாப் சிங் பெறவுள்ளார்.

8. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின இளைஞர், கோவிலில் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

9. இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் முதலாவது பகல்- இரவு போட்டி இதுவாகும்.

10. பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ஐவோரி கோஸ்ட் பகுதியில் சிறிய செயற்கை தீவை உருவாக்கியுள்ளார்.

11. அவ்வகையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.அப்பதிவில், ‘நண்பர் கலைஞானி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’  என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #HEADLINES #RAJINIKANTH