இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 06, 2019 11:04 AM
1, தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும், தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்து சில வாரங்களே ஆன நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று உத்தரப் பிரதேசம் உட்பட நாடு முழுவது விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3, இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.
4, இந்திய குடியரசின் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான இன்றைய தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, “சமூக ஜனநாயகத்தை” வென்றெடுக்க உறுதியேற்போம் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
5, திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் ரன்னர் அப் மற்றும் 'டாப் மாடல் ஆஃப் இந்தியா' பட்டத்தை வென்ற நமீதா அம்மு, இந்தியாவின் சார்பில் ஸ்பெயின் நாட்டு உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். சென்னையில் பிறந்து, பொறியியல் படித்த இவர் நாடோடிகள்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார்.
7, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படடுள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்தது தீர்ப்பளித்துள்ளது.
8, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, போலீஸார் மற்றும் மோப்ப நாய் ஜான்சியுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
9, மரணமே தண்டனை என்றால்தான், ஒழுக்கம் வரும், அப்படியான தண்டனைகள்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும் என்றும் சீமான் கூறியுள்ளார். திஷா கொலைவழக்கில் பாலியல் குற்றவாளிகள் தெலுங்கானா போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதை அடுத்து சீமான் இத்தகைய கருத்தினை கூறியுள்ளார்.
