இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 12, 2019 10:54 AM
1. முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்.

2. அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
4. நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் (38) இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
6. திட்டமிட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7. எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
8. ஸ்டைல், எளிமையால் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராக திகழ்கிறீர்கள் என ட்விட்டரில் ரஜினிகாந்துக்கு சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
10. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியை வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
