இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 15, 2019 10:48 AM
வங்காளதேச அணிக்கெதிராக முதல் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம், சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில், அதிவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுபொலிவு பெற்றுள்ள பாண்டிபஜாருக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் தவறு கிடையாது, அரசியலுக்கு வந்தப்பிறகு மக்களிடம் அவர்கள் நடிக்கக் கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் மோலுக்காஸ் தீவு அருகே, கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
மாணவர்கள் தண்ணீர் குடிக்க அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு இடைவெளியில் 10 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று, கேரள அரசுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கத்தியை காட்டி மிரட்டி, வயதான தம்பதியிடம் இருந்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே சாயல்குடி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற 7 வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தான்.
தென்கொரியாவில் 37 நாடுகளை சேர்ந்த, 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட உலக ஆணழகன் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தந்தை-மகன் பதக்கத்தை வென்றுள்ளனர்.
சூரத்தில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் 165 ரன்களை சேஸிங் செய்து, ஜம்மு-காஷ்மீர் வெற்றிபெற்றது.