‘அவசியம் வந்தால்’... ‘நாங்கள் இருவரும் இணைவோம்’... ‘ரஜினி, கமல் அதிரடி’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 19, 2019 08:32 PM
நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தநிலையில், ரஜினியும் இதனை ஆமோதித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, ‘தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ரஜினியும், நானும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். ரஜினியுடன் இணைந்தால் அது அதிசயம் இல்லை. ரஜினியுடன் அரசியலில் இணைவதற்கான அவசியம் வந்தால் நிச்சயம் அதை தெரிவிப்போம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து, நடிகர் ரஜினிகாந்த் சொன்னது விமர்சனம் அல்ல நிதர்சனம்’ என்றார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘நானும், கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால், கட்டாயம் இணைவோம். எனது கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு கருத்து கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி. சென்னையில் விழா ஒன்று எடுக்கப்பட்டது. அந்த விழாவில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், கமலும்- ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூழல் ஏற்பட்டால் கமலோடு இணைவேன் - ரஜினி அதிரடி
| #Rajinikanth | #KamalHaasan pic.twitter.com/t8bXeKU6DS
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 19, 2019
