‘28 மின்சார ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 16, 2019 04:02 PM

கூடுவாஞ்சேரி அருகே நாளை (நவம்பர் 17) தண்டவாளப் பராமரிப்புப் பணி காரணமாக 28 மின்சார ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

Chennai Local Electric Trains Changed Routes Timings Listed

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கடற்கரை - செங்கல்பட்டு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.55, காலை 6.42, மதியம் 2.45 மணி மற்றும் அரக்கோணம் மதியம் 12.50 மணி மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45 மணி,  திருமால்பூர் மாலை 3 மணி ரயில்களும் தாம்பரம் - காட்டாங்கொளத்தூர் வரையில் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, மதியம் 2.55, மாலை 4.30 மணி ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி மற்றும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20, 1, 1.50, 2.25, மாலை 3.05, 3.45 மணி ரயில்கள் காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்களும் இயக்கப்படவுள்ளன. காட்டாங்கொளத்தூரில் இருந்து செங்கல்பட்டுக்கு மதியம் 12.19, 1.09, 1.49, 2.19, மாலை 3.04, 3.34, 4.19 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், செங்கல்பட்டு - காட்டாங்கொளத்தூர் மதியம் 12.20, 1, 1.50, 2.25, 3.05, 3.45 மணிகளிலும், திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணியில் இருந்தும் காட்டாங்கொளத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #TRAIN #CHENNAI #LOCAL #ELECTRIC #ROUTE #TIMING #CHANGE